செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்:
இதில் பல வகைகள் உள்ளன. ஒரு ஆண் ஒரு பெண்ணை செக்ஸுவல் நோக்கத்தோடு உடல் ரீதியாக தீண்டுவது மட்டுமே புகார் அளிக்கப்படுகிறது அல்லது எதிர்வினை பப்ளிக்காக செய்யப்பட்டுகிறது.
தற்போது ஹோமோசெக்ஸில் நாட்டமுள்ள ஆண்கள் மற்ற ஆண்களை தைரியமாக சீண்ட ஆரம்பித்து உள்ளனர். ஆண்கள் இதை வெளியே சொல்லவோ, புகார் அளிக்கவோ வெட்கப்பட்டு அமைதியாகி விடுகின்றனர்.
லெஸ்பியனாக இருக்கும் ஒரு பெண் இன்னொரு பெண்ணை உடல் ரீதியாக தொடும்போது அது செக்ஸ் சார்ந்த சீண்டல்தான் என தீண்டப்படும் பெண்களுக்கு தெரியவே சில நாட்கள் ஆகிவிடுகின்றன. ஆண் நண்பர்கள் போல அல்லாமல் பெண் நண்பர்கள் பழகும் விதம் வேறு மாதிரியானது என்பதே காரணம்.
பெண் தோழிகளுக்குள் கட்டிப்பிடித்துக்கொள்வது, முத்தம்
கொடுத்துக்கொள்வது எல்லாம் நட்பு சார்ந்த விஷயங்களாக இருக்கின்றன். ஒரே ஹாஸ்டலில் சாதாரணமாக கட்டிப்பிடித்து தூங்கும் பெண்கள் இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் செக்ஸ் நோக்கத்தோடு சீண்டுகிறாள் என்பது தெரியவே நாட்களாகின்றன. தெரிந்தாலும் ஏதும் புகாரோ, திட்டுவதோ இல்லை. நாகரீகமான மறுத்தலோடு முடிந்து விடுகிறது.
பெண் ஆணை செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் செய்தால், ஒன்று ஜாலியாக எடுத்துக்கொள்கிறான், அடிச்சாச்சி லக்கி ப்ரைஸ் என குதூகலிக்கிறான். பெண்ணை பிடிக்கவில்லையெனில் சிம்பிளாக விலகி விடுகிறான். இந்த போஸ்டில் வன்புணர்ச்சியை போட்டு குழப்ப வேண்டாம். அது தனி . கடுமையான தண்டனை வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் என்பது எந்த ஜெண்டர் யாருக்கு தொல்லை கொடுத்தாலும் அதை ஒரே மாதிரியாகத்தான் அணுக வேண்டும். அதற்கான மனநிலை நமக்கு வர வேண்டிய காலகட்டமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் சாஃப்ட் கார்னர் யாராக இருந்தாலும் கூடாது. குறிப்பாக ஒரு பெண்ணுக்கு தன்னை உடல் ரீதியாக ஆண் சீண்டினாலும், பெண் சீண்டினாலும் ஒரே அளவு கோபம் வர வேண்டும்.
ஆண்களும் அசிங்கம் பார்க்காமல், வெட்கப்படாமல் ஒன்றிரண்டு புகாராவது அளித்தால்தான் சரிப்பட்டு வரும் போலிருக்கிறது.
إرسال تعليق